பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூன்று ஆலயங்கள் மற்றும் பாடசாலைக்கு நிதி மற்றும் கணினி உட்பட்ட உதவித்திட்டங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

கரம்பகம் தச்சன்கட்டு வைரவர் ஆலயம், கெற்பேலி கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயம், கெற்பேலி கிழக்கு தரவையம்பதி நாச்சிமார் கோயில் ஆகிய ஆலயங்களுக்கு கட்டுமான பணிகளுக்கான நிதி உதவி குறித்த ஆலயங்களில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்திற்கு கணினி மற்றும் கலர் பிரதி எடுக்கும் இயந்திரம் பிரதேச செயலகத்தில் வைத்து பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த உதவி திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சாவகச்சேரி பிரதேச செயலர் சுபலிங்கம் உசா, பிரதேசசபை உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.