இந்தியாவிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை அரசாங்கம் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக அரசுடன் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சாதகமான பதிலைத் தொடர்ந்து இந்த ஆண்டு படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.< படகு சேவைகள் இராமாயண இதிகாசத்தின் வழியை பின்பற்ற வேண்டுமா அல்லது சங்கமித்த தெரணியாவை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்த விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.