கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கப்பல்களை பயன்படுத்தி சேற்றையும் மணலையும் அகற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதனால், கொழும்பு துறைமுகத்தின் அதிகபட்ச நங்கூரத்திறன் குறைவடைந்து காணப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, குறித்த பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணித்துள்ளார்