அவுஸ்திரேலியாவில்  புகலிடம் கோரி விண்ணப்பித்த 58 இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பரில் 1600-க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இலங்கை உள்ளது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 58 இலங்கையர்களது கோரிக்கைகளும் அடங்குகின்றன.

நவம்பர் மாதம் மொத்தம் 1,643 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்ணப்ப நிராகரிப்பு பட்டியலின் முதலாவது இடத்தில்  மலேசியா உள்ளதுடன், ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது.