இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று(08) நாட்டிற்கு வருகை தந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான குழுவே நாட்டை வந்தடைந்துள்ளது.