Header image alt text

11.01.1987இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த கழகத்தின் தளப் பொறுப்பாளர் தோழர் மென்டிஸ் (அரியராஜசிங்கம் விஐயபாலன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…  கழகத்தின் சிறந்த பயிற்சி ஆசிரியரான தோழர் மென்டிஸ் அவர்கள், இராணுவப் பயிற்சி அளிப்பதிலும், அரசியல் ரீதியில் இளைஞர்களை வளர்ப்பதிலும் அதீத அக்கறை காட்டி வந்தார்.

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர். இந்த சந்திப்பின்போதே, தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்தது. Read more

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளர் வேலுப்பிள்ளை மாதவமேஜர் நீர் ஆகாரமின்றி உண்ணாவிரதம்….

ஜனவரி 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வௌிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோட்டை நீதவான் திலின கமகே இன்று அனுமதி வழங்கினார். இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் வௌிநாடு செல்ல சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார். Read more