கழகத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான தோழர் செல்வபாலன் (லெனின்) அவர்களது புதல்வன் ஈழதர்சனின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் தெரிவுசெய்யப்பட்ட இருபது குடும்பங்களுக்கு கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக தைப் பொங்கலுக்கான பொருட்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

கட்சியின் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் மயூரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் விஸ்ணு, சுதன் ஆகியோர் மேற்படி உதவியை வழங்கிவைத்தார்கள்.