தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தடங்கலின்றி பெற்றுக்கொடுக்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியாது என வௌியாகின்ற கருத்துகள் தொடர்பில் திறைசேரி அதிகாரிகளை நேற்று அழைத்து தேர்தல்கள் ஆணைக்குழு வினவியுள்ளது.
தேர்தல் என்பது அரசியலமைப்பு சார்ந்த விடயம் என்பதால், அதற்கு தேவையான நிதி எவ்வித தடையும் இன்றி பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது திறைசேரி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, தேர்தல் நடத்தாமல் இருப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மாத்திரமே இருப்பதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று அனுராதபுரத்தில் தெரிவித்தார்.