Header image alt text

புரிந்துணர்வு உடன்படிக்கை (14.01.2023)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றாக இருக்க இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாக, எமது இனத்துக்கான பலம் பொருந்திய கட்டமைப்பாக தோற்றம்பெற வேண்டுமென்ற கோரிக்கையை மறுதலித்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவுசெய்யப்பட்ட கட்சியாக உருவாக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தும், தானாகவே அதிலிருந்து வெளியேறியதால் மேற்கண்ட கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக எம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளோம்.

Read more

14.01.2000இல் மரணித்த தோழர் செல்லக்கிளி மாஸ்டர் (வடிவேல் விஐயரட்ணம் – பருத்தித்துறை) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

14.01.1988இல் மரணித்த தோழர்கள் ரங்கன் (பெரியகல்லாறு), ஜோன்சன் (யாழ்ப்பாணம்), சேரலாதன் (குஞ்சுக்குளம்), வேலு (வில்வராஜா – குழவிசுட்டான்), சேகர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….