Posted by plotenewseditor on 16 January 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 16 January 2023
Posted in செய்திகள்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கனேடிய அரசாங்கம் விதித்திருக்கும் தடையை இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட முற்போக்கு நாடுகளும் பின்பற்ற வேண்டுமென உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை வரலாற்று தீர்மானம் எனவும் உலகத் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 January 2023
Posted in செய்திகள்
2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் விண்ணப்பங்களை பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.
Posted by plotenewseditor on 16 January 2023
Posted in செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் நியமனத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் (15) நிறைவடைந்த நிலையில், பிரதிநிதிகள் நியமனத்தை பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. Read more