உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் நியமனத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் (15) நிறைவடைந்த நிலையில், பிரதிநிதிகள் நியமனத்தை பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

உரிய நியமனங்களை தெரிவித்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.

இதேவேளை, சுமார் 20 முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சில அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.