
முன்னைநாள் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரும், பருத்தித்துறை முருகன் மல்ரிசொப் உரிமையாளரும், கழகத் தோழர் முருகதாஸ் (சூரிச்) அவர்களின் அன்புத் தந்தையாருமான திரு. முருகேசு மனோகரன் அவர்கள் (15.01.2023) நேற்று ஞாயிற்றுக்கிழமை (புலோலியில்) காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பெருந்துயரினைப் பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
16.01.2023.
தொடர்புகட்கு : முருகதாஸ்
+41 79 236 72 35