நாடாளுமன்றில் இன்று (18) நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கொள்கை கூட்டமைப்பு என்பன தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு பணியக சட்டத்தினூடாக குறித்த மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை இராணுவத்திற்கு வழங்க முயற்சிப்பதானது கவலையளிப்பதாக அந்த அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more