அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) கப்பல் இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்பு ஆயத்தம் மற்றும்  பயிற்சி -2023 இல் பங்கேற்பதற்காக கொழும்பு துறைமுகத்தை வியாழக்கிழமை (19) வந்தடைந்தது. USS ‘Anchorage’ கப்பலின்  கட்டளை அதிகாரி கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்து நேற்று கலந்துரையாடியிருந்தார்.

CARAT–2023 இன் கடல் பயிட்சிகளின்  ஒரு பகுதியாக, USS ‘Anchorage’ கப்பலானது, இலங்கை கடற்படையின் SLNS கஜபாகு மற்றும் SLNS சமுதுராவுடன் இணைந்து பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன. இந்த பயிற்சிகளை முடித்துக்கொண்டு ஜனவரி 27 ஆம் திகதி  USS ‘Anchorage’  கப்பல் இலங்கையில் இருந்து  புறப்படும்.