உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம்  இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேநேரம், நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்புமனு கோரும் இறுதி நாளான்று வாக்களிப்பு இடம்பெறும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.