Header image alt text

வவுனியா கோவிற்புதுக்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். Read more

22.01.2017 ஆம் ஆண்டு மரணித்த தோழர் கண்ணன் ( தர்மரட்ணம் ஜூட் புஷ்பசீலன்- சண்டிலிப்பாய்) அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

22.01.2006 ஆம் ஆண்டு கணேசபுரத்தில் மரணித்த தோழர் தம்பி (தர்மகுலசிங்கம் – வவுனியா) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணையெடுப்புக்கு முன்னதாகஇ இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் நீண்ட கால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more

இலங்கை உட்பட்ட சர்வதேச தத்தெடுப்புகள் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நோர்வேயின் சிறுவர் மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் கெர்ஸ்டி டோப்பே இதனை தெரிவித்துள்ளதாக ஜனவரி நோர்வே செய்தித்தாளான வீஜி தெரிவித்துள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள விசாரணைக்குழு இலங்கை உட்பட அனைத்து தொடர்புடைய நாடுகளில் இருந்து நிகழ்ந்த தத்தெடுப்புகள் குறித்து ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேட்பாளர்களுக்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார். Read more

நானுஓயா – ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலிய நீதவான் நீதிமன்றில் பஸ் சாரதி  இன்று(22) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more