உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேட்பாளர்களுக்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார்.
ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடனேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை(23) ஆரம்பமாகவுள்ளது.
278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
நாளை(23) ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நிறைடையவுள்ளது.