Header image alt text

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவச்சிலை வலிதெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் கருணாகரன் தர்சன் அவர்களின் தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டது. Read more

2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தி 2 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(23) மரணதண்டனை விதித்துள்ளது. Read more

வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபியாவிற்கு இன்று(23) பயணமாகின்றார். சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சரின் அழைப்பை அடுத்து இந்த விஜயம் அமைகின்றது. வௌிவிவகார அமைச்சரின் சவுதி அரேபிய பயணம் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. Read more

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு துறைமுக தொழிற்சங்கத்தினர் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read more