அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு துறைமுக தொழிற்சங்கத்தினர் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டணியால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக கொழும்பு முதலாம் குறுக்குவீதி மற்றும் அப்துல் காதர் மாவத்தை உள்ளிட்ட வீதிகளின் போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.