வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபியாவிற்கு இன்று(23) பயணமாகின்றார். சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சரின் அழைப்பை அடுத்து இந்த விஜயம் அமைகின்றது. வௌிவிவகார அமைச்சரின் சவுதி அரேபிய பயணம் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலத்தில் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் புனித மக்கா, மதீனா நகரங்களின் ஆளுநர்கள் ஆகியோருடன் வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.