முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக A.H.M.பௌஸியின் பெயர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட A.H.M.பௌஸி, 48701 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.