தேர்தலை நடத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என மத்திய வங்கி ஆளுநரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஊடாக வினவியுள்ளது. தேர்தலுக்கான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகியவற்றுக்கு தேவையான டொலர்களை வழங்க முடியுமா என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மத்திய வங்கி ஆளுநரிடம் வினவப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை முறையாகப் பேணுவதில் தடையாக உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையின் தலைவர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
டொலர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை கிடைக்குமா என்பது குறித்து மத்திய வங்கியிடம் வினவுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இந்த கலந்துரையாடலின் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.