பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான காணி விஸ்தரிப்புக்காக கடந்த காலங்களில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டடிருந்தன. வலி வடக்கு பிரதேச மக்களின் காணிகள் நீண்டகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தன. இந்தநிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (26) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நடவடிக்கையில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி நிலஅளவை திணைக்களம்இ விலை மதிப்பீட்டு அதிகாரிகள் கிராம சேவகர்கள் ஈடுபட்டனர்.
இப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் ‘காணிகளுக்கான நட்டஈடு தேவையில்லை காணிகளே எமக்கு தேவை’ காணிகள் இல்லாமல் 30 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து துன்பப்படுகிறோம் விவசாயம் செய்த காணி தற்போது விவசாயம் செய்யாமல் கூலி தொழிலுக்கு செல்கிறோம் காணியினுடைய பெறுமதி தற்போதய சூழ்நிலையில் ஒரு ஏக்கர் 50 இலட்சத்துக்கு அதிகமாக இருக்கும்.
ஆனால் இவர்கள் என்ன பெறுமதியை தரப்போகிறார்கள்இ வயதான காலத்தில் எங்களுக்கு என்று ஒரு காணி கூட இல்லாமல் தெருவில் நிற்பதாகவும் தெரிவித்திருந்தனர்.