பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியக சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டு சான்றுப்படுத்தினார்.
இதற்கமைய, இந்த சட்டமூலங்கள் 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க புனர்வாழ்வு பணியக சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் என்ற பெயரில் அமுல்படுத்தப்படவுள்ளன.