Header image alt text

28.01.2016இல் மரணித்த மட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில்லை பிறப்பிடமாகவும், புதூரை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் வெள்ளையன் (நாகமணி சிவராசா – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் – வவுணதீவு) அவர்களின் 7ம் ஆண்டு நினைவுநாள் இன்று…

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் விக்டோரியா நுலண்ட் (Victoria Nuland) நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று முதல் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை அவர் நேபாளம்,  இலங்கை, இந்தியா மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். Read more

50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய  பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கி, மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். Read more

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக W.A.சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில்  ஆணைக்குழுக்கள் முன்வைத்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது. Read more