50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கி, மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் வவுனியா, கண்டி, மாத்தறை, குருநாகல் பிரதேச காரியாலயங்களில் மூன்று நாட்களுக்குள் விரைவு சேவையின் ஊடாக கடவுச்சூட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தூதரகங்களுக்கு சென்று கைவிரல் அடையாளத்தை உறுதிப்படுத்தி, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்காக மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஒன்றில் 2 இலட்சம் டொலர் நிதியை வைப்பிலிடவேண்டும் எனவும் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
குறித்த வைப்பீட்டுத் தொகை இரண்டு வருடங்களுக்கு வைப்பில் இருக்க வேண்டும் என கூறிய அவர், பின்னர் ஒரு இலட்சம் டொலர்கள் மீள வழங்கப்படும் எனவும் கூறினார்.
அவ்வாறு செய்பவர்களுக்கு 10 வருட விசா வழங்கப்படும் என்றும் இது நாட்டிற்கு ஒரு முதலீடாக அமையும் எனவும் னரல் ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.
அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.