ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோலை தளமாகக் கொண்ட குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிடியூட்டின் தற்போதைய தலைவராகவும் உள்ள பான் கீ மூன் பெப்ரவரி 06 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பான் கீ மூன் தனது பயணத்தின் போதுஇ இலங்கை ஜனாதிபதியை பெப்ரவரி 07 ஆம் திகதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

மேலும் இலங்கையில் காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.