Header image alt text

யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி வெள்ளிக்கிழமை (3) உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதோடு, மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கும் தேவையான உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு  பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளன. Read more

மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார். Read more

நாட்டின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்த வகையிலும் அமுல்படுத்தக் கூடாது என மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு  கடிதம் அனுப்பி வலியுறுத்தியுள்ளனர். Read more

2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. Read more

வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள். வவுனியா நகர சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் திருநாவற்குளம் 5ம் ஒழுங்கையின் விவேகானந்தர் வீதி கிரவலிடல் பணிகள் முதன் முறையாக 180m தூரம் கிரவலிடல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில், இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரே நேற்று (01) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more