உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் அஞ்சல்மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதற்கிடையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியும், நடத்தக் கூடாது என்று கோரியும் உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 10 ஆம் திகதியன்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது