இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தின் சில பகுதிகளில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக இந்த கடையடைப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கடையடைப்பு காரணமாக வர்த்தக நிலையங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.  தனியார் பஸ் சேவைகள் இன்று இடம்பெறவில்லை.  இலங்கை போக்குவரத்து சபை சேவைகள் மாத்திரமே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவு  மாவட்டம்  – மல்லாவி, துணுக்காயிலும் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. போக்குவரத்து முடங்கியிருந்ததுடன், குறித்த பகுதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன.