Header image alt text

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் ஆகிய நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வும் தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நேற்றுமாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

Read more

யாழ்.மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ்.மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட்  அறிவிக்கப்பட்டிருந்தார். Read more

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன இன்று(06) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, மேல் நீதிமன்ற நீதிபதி M.A.R.மரிக்கார், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் இன்று(06) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பஸ்களில் 50 பஸ்கள் இன்று(05) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. எமது நாட்டிலுள்ள கிராமப் புறங்களின் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார். Read more

வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள். வவுனியா நகர சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் திருநாவற்குளம் RDS முன் வீதியின் முதலாம் ஒழுங்கையின் கிரவலிடல் பணிகள் முதன் முறையாக 110m தூரம் கிரவலிடல் பணிகள் நடைபெற்றது.

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இன்று(06) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்த அவரை, வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றுள்ளார். பான் கீ மூனுடன் மேலும் 04 இராஜதந்திரிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.