வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள். வவுனியா நகர சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் திருநாவற்குளம் RDS முன் வீதியின் முதலாம் ஒழுங்கையின் கிரவலிடல் பணிகள் முதன் முறையாக 110m தூரம் கிரவலிடல் பணிகள் நடைபெற்றது.

மேற்படி அபிவிருத்தி பணிகளை நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன், மிக நேர்த்தியான வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.
திருநாவற்குளம் கிராமத்தில் 22 வருடங்களின் பின்னர் முதன் முறையாக இவ் வீதி கிரவலிடல் வேலைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.