மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன இன்று(06) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, மேல் நீதிமன்ற நீதிபதி M.A.R.மரிக்கார், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் இன்று(06) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.