2023ஆம் ஆண்டில் இலங்கையர்களுக்கு 6,500 கொரிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 28 .79 வீத அதிகரிப்பு என்பதுடன், இலங்கை வரலாற்றில் கொரிய வேலைவாய்ப்பு அதிகமாக வழங்கப்பட்ட ஆண்டு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரிய வேலைவாய்ப்பிற்காக 14,588 விண்ணப்பதாரர்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ளடக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உற்பத்தித் துறையில் 12,189 பேருக்கும் மீன்பிடித் துறையில் 2,149 பேருக்கும் நிர்மாணத்துறையில் 250 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.