பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சட்டத்தரணியும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான மு.றெமீடியஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு உள்ளானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள றெமீடியஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.