13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று(08) மாநாடு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மூன்று பீடங்களின் பிக்கு ஒன்றியத்தினரால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.இன்றைய மாநாடு ஶ்ரீ ஜயவர்தனபுர பரகும்பா பிரிவேனாவில் நடைபெறவுள்ளதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.