Header image alt text

நன்றி சபாநாயகர் அவர்களே
நேற்று முன்தினம் ஜனாதிபதி, அவர்களுடைய கொள்கைப் பிரகடன உரையிலே பல விடயங்களை சுட்டிக்காட்டினார். இந்த நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தது. இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தான் எடுக்கின்ற முயற்சிகள். அது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சம்பந்தமாகவும் பல விடயங்களை எடுத்துக் கூறியிருந்தார். Read more

தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டார். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்றுமுற்பகல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியை வாழ்விடமாக கொண்ட செல்வி சசிரேகா சிவகுமாரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் முல்லைத்திவில் இயங்கும் இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு தலா ரூபா 25000/= வீதம் செல்வி சசிரேகாவின் தாயாரினால் வழங்கிவைக்கப்பட்டது. Read more

மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு தமிழ் பிரதிநிதிகள் அனைத்தையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்

தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 17,674 பேரும் சிரியாவில் 3,377 பேரும் இறந்துள்ளனர். அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. Read more

இலங்கை அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெறுவதுடன்இ உள்நாட்டுச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more