உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் அவர்களுடன் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக நிதியமைச்சினால் ஒதுகிடப்பட்டுள்ள நிதி, இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பு கொழும்பில் இன்று தெரிவித்துள்ளது