யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் இன்று தோற்கடிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 45 உறுப்பினர்களைக் கொண்டு யாழ். மாநகர சபையில் இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்

இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 24 வாக்குகளும் ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் மூலம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் இன்று தோற்கடிக்கப்பட்டது