கொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் நேற்றிரவு திருடர்கள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த லெப்டாப் உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இரண்டாம் மாடி ஜன்னல் மூலம் இவர்கள் உள்ளே நுழைந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இதன்போது, பெட்டகத்திலிருந்த பணத்தையும் திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, இந்திய விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் அவசர தூதரக நடவடிக்கை அல்லது விசா தொடர்பான தேவைகளுக்கு, உயர்ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.