அமெரிக்க உதவிப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்ததாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இந்து – பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி றொயல் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று இருவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தனர். Read more