உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச அச்சகம் இணங்கியமைக்கு அமைய, உரிய தினத்தில் தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.