இன்றையதினம் தமிழ்நாடு இந்து மக்கள் கட்சியினுடைய தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் மரியாதையின் நிமித்தம் இன்றுமுற்பகல் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கும் உமாமகேஸ்வரன் நூல்நிலையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது அவர்கள் புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.