Header image alt text

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன. மனித உரிமைகள் குழுவின் 137வது அமர்வு 2023 பெப்ரவரி 27 முதல் மார்ச் 24 வரை நடைபெறும். இதில் இலங்கை பெரு பனாமா எகிப்து சாம்பியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன. Read more

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு இராணுவ பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புது டெல்லியில் இடம்பெற்ற 7 ஆவது இந்திய – இலங்கை வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. இன்று (24) நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் எழிலன் உள்ளிட்ட 03 பேரை மன்றில் ஆஜராக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு மன்றில் ஆஜர்படுத்த முடியாமல் போனால், அதற்கான காரணத்தை இலங்கை இராணுவம் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி நேற்று (23) உத்தரவிட்டுள்ளார். Read more