கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வசந்த முதலிகே உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.