அமெரிக்க உதவிப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்ததாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இந்து – பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி றொயல் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று இருவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தனர். Read more
16.02.1986 இல் வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் மரணித்த தோழர் நியாஸ் (செ.அம்பிகைபாகன்- நொச்சிமோட்டை), மாயக்கண்ணன் ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
16.02.2007 இல் வவுனியா திருநாவற்குளத்தில் மரணித்த தோழர் கோன் (செல்லர் இராசதுரை- வவுனிக்குளம்) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…
தற்போது நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களே டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்தை் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் பதவியில் உள்ள அமெரிக்க இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் மூத்த இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவே நேற்று இலங்கை வந்துள்ளது. கிரீஸில் இருந்து வந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் இரவு 7 மணியளவில் இலங்கை வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் நேற்றிரவு திருடர்கள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த லெப்டாப் உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இரண்டாம் மாடி ஜன்னல் மூலம் இவர்கள் உள்ளே நுழைந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் இன்று தோற்கடிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 45 உறுப்பினர்களைக் கொண்டு யாழ். மாநகர சபையில் இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து, இன்று(14) மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று(13) கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போன நபர்களுக்கு இன்று(14) நண்பகல் 12 மணி முதல் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.