Header image alt text

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அச்சகம் எழுத்து மூலம் இதனை அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எக்ல்டன் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாரத்தை சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை 675,000 இற்கும் அதிகமான தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. Read more

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் அவர்களுடன் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். Read more

ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மற்றும் பாரிய அழிவுக்கு உள்ளான மக்களுக்கு நீதி வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். Read more

ஒரு கிலோகிராம் நெல்லை 100 ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(12) நடைபெற்ற நெல் அறுவடை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். கிளிநொச்சி – பரந்தன் வயல்வெளியில் விவசாயிகளை சந்தித்த ஜனாதிபதி, விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். Read more

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரியே எழுத்து மூல கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. Read more

வீதி விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் பயணித்த உந்துருளி, வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது