நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus உடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
இலங்கையின் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரிடம் இதன்போது தௌிவுபடுத்தியதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டார்.