பொதுத் தேர்தலால் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் வீதியில் இறங்கிப் போராடுவதால் அது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஜூலை மாதத்தில் பாராளுமன்றத்தை பாதுகாத்தமைக்காக முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள நாடுகளில் அராஜகம் தலைதூக்கும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்றம் இல்லாவிட்டால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பலன்கள் விரைவில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.