Header image alt text

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணய அலகாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இணைந்தே இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன. Read more

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகமும் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று(05) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.நியூசிலாந்தின் ஒக்லண்ட் நகரிலிருந்து துபாய் நோக்கி பயணிக்கும் குறித்த EK 449 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 62,800 லீட்டர் எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளது. Read more